கோண்டாவில் சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா. இன்று(16.01.2018) மாலை வெகுவிமசையாக இடம்பெற்றது.

பக்தர்களுக்காக தெய்வம் செயல்ப்படும் செயல்களை நிரூபித்த நிகழ்ச்சிகளில் ஒன்றே அபிராமிப்பட்டர் நிகழ்வாகும். அதாவது அம்பிகையானவள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமிப்பட்டரின் வேண்டுகோளை ஏற்று செயற்பட்ட வரலாற்றை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக இவ்விழா தை அமாவாசை அன்று சைவ ஆலயங்களில் முக்கியமாக அம்மன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. அபிராமி அந்தாதி பராசக்தியை வழிபட்ட அந்தணரான அபிராமிப்பட்டரால் பாடப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.