இனி இன்ஸ்டாகிராம் அப்டேட்டுகளை வாட்ஸ் அப்பிலும் ஸ்டேடஸ்சாக வைக்கலாம்!

இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, தற்போது வாட்ஸ் அப்பிலும் ஸ்டேடஸ்சாக வைக்கும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது.
இன்ஸ்டாகிராம் தனது பயன்பாட்டாளர்களுக்கு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இனி உங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸாக மாற்றிக்கொள்ளும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் வெளியிட உள்ளது.
வாட்ஸ் அப்பில் உள்ள எல்லா தகவல்கள் போன்றும் இந்த தகவலும் என்கிரிப்ட் செய்யப்படும் என்றும் தற்போது இந்த செயல்முறை சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் தனது பயன்பாட்டாளர்களுக்கு ஹாஷ் டேக் பின் தொடர்வதற்கான அம்சத்தை அப்டேட் செய்தது. இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களை பின் தொடர்வதுபோல் அதன் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்தமான ஹாஷ் டேக்-ஐ பின்தொடர முடியும் .

Get real time updates directly on you device, subscribe now.