யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து பெறும் பகுதியில் பொதுமக்களுக்கு அசௌகரியம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து வழங்கும் பகுதியில் இரண்டு உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளால் மருந்துக்குளிகைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவர்களின் குறிப்புடன் 400இற்கும் அதிகமானோர் வரிசையில் 3 மணி நேரங்களுக்கும் மேலாக காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

“இரண்டு மருந்து வழங்குனர்களே பொது மருத்துவ சேவை கடமையில் உள்ளனர். வரிசை ஒழுங்கமைப்புக்கு 4 பேர் கடமையில் உள்ளனர்.

நோயாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிக்கு வருவோரின் மனதை நோகடிக்கும் வகையில் பாதுகவலர்களின் பேச்சுக்கள் அமைகின்றன.

தினமும் 3000இற்க்கு மேற்பட்ட நோயாளர்களை பார்வையிட நூற்றுக்கோ மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். எனினும் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அவலம் நீடிக்கிறது” பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டது.