மகிந்த கட்சியில் போட்டியிட நடிகையிடம் பாலியல் இலஞ்சம்

உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் கட்சியில் போட்டியிடும் நடிகையான வேட்பாளர் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மதுஸா ரணசிங்க என்ற இந்த நடிகையிடம் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மகிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் களமிறங்கும் பொதுஜன முன்னணியின் அலுவலர் ஒருவர் இந்த பாலியல் இலஞ்சத்தை கோரியதாக முன்னதாக முறையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமக்கு வேட்பாளர் நிலை வழங்கப்பட வேண்டும் எனில் தனது நிர்வாணப்படம் ஒன்று வேண்டும் என்று தம்மிடம் கட்சி அலுவலர் ஒருவர் கோரியதாக அந்த நடிகை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் தாம் முறையிட்டபோதும், வெறுமனே தான் இந்த சம்பவத்துக்கு வருந்துவதாக அவர் கூறி விடயத்தை முடித்துவிட்டதாக நடிகை சுட்டிக்காட்டியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like