குடும்பத்தில் மோதல்!! ஐந்து பிள்ளைகளுடன் மாயமான தாய்!! யாழ் நகரில் பரபரப்பு!!

தனது ஐந்து பிள்ளைகளுடன், தாயார் ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவத்தால்யா ழ்ப்பாணம் அரசடி பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் அரசடி வீதி நல்லூர் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவரே ஐந்து பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாக உறவினர்களினால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (11.01.2018) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
36 வயதுடைய பிரதீபன் திவானி என்ற தாயும் மற்றும் அவரது பிள்ளைகளான 11 வயதுடைய பிரதீபன் கஜநிதன் 09 வயதுடைய பவனிதன் 08 வயதுடைய அருள்நிதன் மற்றும் இரட்டை பிள்ளைகளான 02 வயதுடைய யதுசியா யஸ்ரிகா என்ற ஐந்து பிள்ளைகளும் நேற்றைய தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பெண்ணின் கணவன் சாரதி வேலை செய்துவருவதாக கூறப்படுகிறது. காணாமல்போன தினத்தன்று குடும்பத்தில் தாய்க்கும் மகளுக்கும் இடையில் பிரச்சினை ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் தாயார் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது, வீடு பூட்டியிருந்துள்ளதுடன், பிள்ளைகள் ஐவரும் காணவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது .

Get real time updates directly on you device, subscribe now.

You might also like