வப்பு வப்புன்னு சாப்பிட்டா மட்டும் போதுமா..? சிறுவன் உடலில் 22 லிட்டர் ரத்தம் உறிஞ்சிய புழுக்கள்: தப்பிக்க ஒரே வழி…

உத்தரகாண்டில் சிறுவன் ஒருவனின் உடலில் இருந்து கொக்கிப் புழுக்கள், 2 வருடமாக லிட்டர் கணக்கில் ரத்தத்தை உறிஞ்சி இருப்பதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம் என நினைப்பார்கள்.
அந்த அளவுக்குக் குழந்தைகளைப் பரவலாகப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சினை, குடல்புழுத் தொல்லை.
சுயசுத்தம் குறைவதால் இது உண்டாகிறது. சுற்றுச்சூழல் சுகாதாரம் பெரிதும் மோசமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் சிறுவர், சிறுமிகளுக்கும் இளம் வயதினருக்கும்கூட இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது.
அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது.
அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.
சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு.
ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என்று இனமுண்டு. பெண் புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும்.
குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில் புகுந்துகொள்ளும். கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல் சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’எனப்படும் குறும்புழுக்கள் வெளிவரும்.
இந்த புழுக்களால் தான் சிறுவனுக்கு பதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடைசி வரை எந்த ஸ்கேனிலும் தலைகாட்ட வில்லையாம்.
சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், பெற்றோர்களை அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்கள் சிறுவனின் குடல் பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சிறுவனின் குடல் பகுதியில் நூற்றுக்கணக்கான கொக்கிப் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இந்த புழுக்கள் சிறுவனின் உடலில் இருந்து 2 வருடத்தில் சுமார் 22 லிட்டர் ரத்ததை உறிஞ்சி இருப்பதையும் அவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த புழுக்கள் மிகவும் ஆபத்தானவை.
உணவு பழக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஒன்றே இதிலிருந்து தப்பிக்க வழியாகும். அரைகுறையாக வேக வைத்த இறைச்சிகளும் புழுக்களை உருவாக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.