ஶ்ரீ கஜனை கைது செய்ய விசேட விசாரணைகள் முன்னெடுப்பு

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளி தப்பிச்செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜனை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சந்தேகநபரான ஶ்ரீ கஜன் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கான எவ்வித சாத்தியங்களும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே வெளிநாடு செல்ல முயற்சித்த அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திருப்பி அனுப்பியிருந்தனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஶ்ரீ கஜனின் வௌிநாட்டு கடவுச்சீட்டு ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.