இரு தினங்­க­ளாக கடும் மழை- காலி, களுத்­து­றை­யில் வெள்­ளம்!!

கடந்த இரண்டு நாள்­க­ளாகப் பெய்­து­வ­ரும் கடும் மழை கார­ண­மாக காலி, களுத்­துறை மாவட்­டங்­க­ளின் தாழ்ந்த பிர­தே­சங் கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ளன, என்று இடர் முகா­மைத்­துவ மையப் பணி­ய­கத்­தின் பிர­திப் பணிப்­பா­ளர் பிர­தீப் கொடிப்­பிலி தெரி­வித்­தார்.

காலி மாவட்­டத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு முழு­வ­தும் கடும் மழை பெய்­த­மை­யால் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக காலி மாவட்ட இடர்­மு­கா­மைத்­துவ மையப் பணி­ய­கத்­தின் உத­விப் பணிப்­பா­ளர் லெப்­டி­னன்ட் கேர்­ணல் தம்­பத் ரத்­நா­யக்க தெரி­வித்­துள்­ளார்.

நேற்­றுக்­காலை வரை­யான ஆறு மணி­யு­ட­னான 24 மணித்­தி­யால காலப்­ப­கு­தி­யில் காலி ஜிந்­தொட்ட பிர­தே­சத்­தி­லேயே அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. 175 மில்­லி­மீற்­ற­ராக இங்கு மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. காலி நக­ரத்­தில் 160 மில்­லி­மீற்­றர் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

நேற்­று­முன்­தி­னம் பெய்த கடும் மழை­யின் கார­ண­மாக பேரு­வளை, பாணந்­துறை ஆகிய பிர­தேச பகு­தி­க­ளில் தாழ்­நி­லங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­ய­தாக களுத்­துறை மாவட்ட இடர்­மு­கா­மைத்­துவ மையப் பணி­ய­கம் தெரி­வித்­துள்­ளது.

ஓடை­கள் மற்­றும் வடி­கான் கட்­ட­மைப்­பில் நீர் வழிந்­தோ­டு­வது தடைப்­பட்­டமை இதற்­குக் கார­ணம் என்­றும் மையப் பணி­ய­கத்­தின் உத­விப் பணிப்­பா­ளர் கேர்­ணல் பிர­சாத் ஜய­சிங்க தெரி­வித்­தார்.

இதே­வேளை, மன்­னா­ரி­லி­ருந்து கொழும்பு மற்­றும் காலி ஊடாக மட்­டக்­க­ளப்பு வரை­யான கரை­யோ­ரத்­துக்கு அப்­பாற்­பட்ட கடல் நாளை செவ்­வாய்க்­கி­ழமை வரை ஓர­ளவு கொந்­த­ளிப்­பா­கக் காணப்­ப­டு­வ­து­டன், அலை­க­ளின் தாக்­க­மும் அதி­க­மா­கக் காணப்­ப­டு­மென வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது.

2018ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி வரை மன்­னா­ரி­லி­ருந்து கொழும்பு மற்­றும் காலி ஊடாக மட்­டக்­க­ளப்பு வரை­யான கரை­யோ­ரத்­துக்கு அப்­பாற்­பட்ட கடற்­ப­ரப்­பு­க­ளில் 2.0 – 2.5 மீற்­றர் உய­ரம் வரை மேலெ­ழும் அலை­கள் கார­ண­மாக கடற்­ப­ரப்­பு­கள் ஓர­ளவு கொந்­த­ளிப்­பா­கக் காணப்­ப­டு­வ­து­டன், அலை­க­ளின் தாக்­க­மும் அதி­க­மா­கக் காணப்­ப­டும்.

இடி­யு­டன் கூடிய மழை பெய்­யும் வேளை­க­ளில் தற்­கா­லி­க­மாக கடல் மிக­வும் கொந்­த­ளிப்­பா­கக் காணப்­ப­டும் என்­ப­தால் மீன­வர்­கள் கட­லுக்­குச் செல்­வ­தில் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.