காதலி மரணம்: காதலன் விளக்கமறியலில்!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலன் எதிர்வரும் திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23வயது) என்ற இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கிடாச்சூரி பகுதியைச்சேர்ந்த தெய்வலோகசிங்கம் விதூசிகா என்ற (17 வயது) யுவதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.

குறித்த யுவதி இளைஞனின் வீட்டுக்கு வந்தவேளை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் யுவதியை ஒப்படைத்த இளைஞனின் பெற்றோர், இளைஞனை பிரித்து சம்பூர் பகுதியிலுள்ள தனது உறவினர்களின் வீட்டுற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனையடுத்து குறித்த யுவதி காதலனுக்கு தான் சம்பூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச்செல்லுமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை காதலனான குறித்த இளைஞன் சம்பூர் பகுதிக்கு சென்று தனது காதலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்துள்ளார்.

அவ்வேளை பெண்ணின் உறவினர்கள் குறித்த இருவரையும் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.

இதேநேரம் மோட்டார் சைக்கிளை வேகமாக போகும் போது வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன் காயங்களுக்குள்ளான 23 வயதுடைய காதலன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like