பிரபாகரன் உயிருடன்… ஆதாரத்துடன் அம்பலமான உண்மை

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன?

வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. அப்பாவி மக்கள் இருக்கின்ற போது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும்?

பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக உடலொன்றை காண்பித்தார்கள். உண்மையில் அவருடைய உடலாக இருந்திருந்தால் ராஜபக்ச அரசு அதனை கொழும்புக்குக் கொண்டு வந்து பன்னாட்டு ஊடகங்களுக்கு காண்பித்திருப்பாரா இல்லையா? அதனை ஏன் செய்யவில்லை.

அதற்கு அடுத்ததாக மரபணுப்பரிசோதனை (டி.என்.ஏ) சோதனை செய்தாக கூறினார்கள். பிரபாகரன் இறந்த தருணத்தில் அவருடைய பெற்றோர்கள் வல்வெட்டித்துறையில் தான் இருந்தார்கள். அப்படியென்றால் அவர்களுடைய இரத்தமாதிரி பெறப்பட்டு சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்? அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

இதை விட மகிந்த அரசினால் காட்டப்பட்ட உடல் பிரபாகரனின் உடல் இல்லையென்பதற்கு வேறு ஆதாரம் ஏதும் தேவையில்லை என்றார்.