வவுனியாவில் பொலி­ஸாரிடம் சிக்கிய தாயும் – மகனும்! இப்படியும் நடக்குமா??

பல இடங்­க­ளில் திருடி வந்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் தாயும் அவ­ரது மக­னும் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்த­னர்.

வெவ்­வேறு நாள்­க­ளில் 11 இடங்­க­ளில் திரு­டிய அவர்­கள் நேற்­றுக்­காலை கோவி­லில் திரு­ட­முற்­பட்­ட ­போதே மாட்­டி­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வவு­னியா தாண்­டிக்­கு­ளம் ஐய­னார் கோவி­லில் நேற்­றுத் திரு­ட­முற்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. 45 வயது மதிக்­கத்­தக்க பெண்­ணும் அவ­ரு­டைய 10 வயது மக­னுமே கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் கோவி­லில் நேற்று வழி­பா­டு­கள் நிறை­வ­டைந்த பின்­ன­ரும் மாலை­வரை அங்கு நின்­றுள்­ள­னர்.

மாலை 5 மணி­ய­ள­வில் ஆலய நிர்­வா­கத்­தி­னர் கத­வைத் திறக்க முற்­பட்­ட­போது கத­வின் பூட்டு உடைக்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னித்­த­னர்.

அந்­த­நே­ரம் சந்­தே­க­ந­பர்­கள் இரு­வ­ரும் கோவி­லி­லி­ருந்து வெளி­யில் சென்­ற­னர். அவர்­க­ளி­டம் கேட்­ட­போது தமக்கு அது­பற்­றித் தெரி­யாது என்று கூறி­யுள்­ள­னர்.

அவர்­க­ளின் பேச்­சில் சந்­தே­க­ம­டைந்த நிர்­வாகி பெண்­ணின் கைப் பையை வாங்­கிப் பார்த்­த­போது தற்­குள்ளே பல சாவி­க­ளும், பூட்­டு­கள் உடைக்க பயன்­ப­டும் சிறிய ஆயு­தங்­க­ளும் இருந்­துள்­ளன.

பொது­மக்­கள் ஒன்று கூடி­னர். விசா­ரித்­த­போது பல இடங்­க­ளில் பூட்­டு­டைத்­துத் திரு­டி­யுள்­ளமை தெரி­ய­வந்­தது.

கொழும்­புத்­து­றை­யி­லுள்ள அந்­தோ­னி­யார் கோவில் ,கிளி­நொச்சி பிள்­ளை­யார் கோவில், வவு­னியா கந்­த­சாமி கோவில் ,சிதம்­ப­ர­பு­ரம் கோவில், மன்­னார் வைத்­தி­ய­சா­லைக் கோவில் போன்­ற­ன­வற்­றில் அவர்­கள் திரு­டி­யுள்­ளமை தெரி­ய­வந்­தது.

அது­மட்­டு­மன்றி, கல்­லாண்­ட­கு­ளத்­தில் உள்ள வீடு ஒன்­றில் குறித்த பெண்­ணின் கண­வர் திரு­டி­யுள்­ளார் என்­ப­தும் தெரி­ய­வந்­தது. இரு­வ­ரும் மன்­னா­ரைச் சேர்ந்­த­வர்­கள்.

வவு­னியா கோம­ர­சங் குளத்­த­டி­யில் தற்­கா­லி­க­மாக வசித்து வரு­கின்­ற­னர் என்­றும் பொலிஸ் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. அவர்­கள் நீதின்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று வவு­னியா பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like