இன்று அதிகாலை திருகோணமலையில் நடந்த பயங்கரம்!

திருகோணமலை – பாலையூற்று பிரதேசத்தில் இன்று(5) அதிகாலை கணவர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கத்திரிகோலால் தனது மனைவியை அவர் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காவல்துறை ரோந்து குழுவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.இதன்போது கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்திருந்த பெண்ணை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதோடு, நல்லிதன் தமயந்தி என்ற 26 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like