இன்றைய ராசிபலன் 23-04-2018

மேஷம்: மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள். கணவன் – மனைவிக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், சோர்வாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடமும் பங்குதாரர்களிடமும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும்.

ரிஷபம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருந்தாலும், எதிர்பார்த்த லாபம் கிடைத்து விடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்: உற்சாகமான நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களிடம் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்: தெய்வ அனுகிரகம் நிறைந்த நாளாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச்செய்தி இன்று வந்து சேரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்படும். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி: எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பிள்ளைகள் தொடர்பான பணியை முன்னிட்டு பயணம் மேற்கொள்ள நேரும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். தந்தையின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்: அனுகூலமான நாள். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

தனுசு: இன்று புதிய முயற்சி எதுவும் வேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தவும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அலுவலகத்தில் உங்கள் வேலையுண்டு நீங்களுண்டு என்று மற்றவர்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரம்: உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்புத் தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

மீனம்: இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். கணவன் – மனைவிக்கிடையில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சில குழப்பங்கள் ஏற்படலாம். உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like