மயிலிட்டி மக்களிடம் இராணுவத்தினர் வேண்டுகோள்!

மயிலிட்டி பகுதியில் இராணுவத்தின் பாவனையில் இருந்த பகுதிகளில் 678 ஏக்கர் நிலம் பொது மக்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டன.

மயிலிட்டி பகுதியில் நேற்றைய தினம்(18) மாலை வீட்டு உரிமையாளர்கள் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது, தண்ணீர்த் தொட்டிக்குள் பழைய ஆயுதங்கள் இருந்துள்ளன.

இதேவேளை வீடொன்றில் இருந்தும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்கள் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம், பலாலி இராணுவத்தினர் சென்று கண்ணிவெடிகள் மற்றும் பழைய ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறான அநாமதேய வெடிபொருட்கள் இருப்பதை பொது மக்கள் அவதானித்தால், அவற்றினைக் கையால் தொடாமல் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இராணுவ முகாம்களிற்கு அறிவக்குமாறும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like