நிர்மலா தேவி வாக்குமூலத்தால் மிரண்டு போன பொலிஸ்!

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி, அருப்புக்கோட்டை பொலிசாரல் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் மகளிர் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணி வரை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, பேராசிரியை நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தில் ‘பத்தாண்டு கால கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது’ என்று கூறியதை கேட்டு காவல்துறை உயர் அதிகாரிகள் மிரண்டு போயினர். அப்படியென்றால் பிரச்சனை இன்னும் பூதாகரமாக வெடிக்க உள்ளது.

இதுகுறித்து, பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, நிர்மலாதேவியின் பெற்றோரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

கடந்த மாதம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றிருந்தார். அப்போது, தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களின் தூண்டுதலின்பேரில் அருப்புக்கோட்டை கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளை அவர் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டி வற்புறுத்தியதாக தெரிகிறது.

மேலும், உயர் கல்வித் துறையில் பல அதிகாரிகளுடனும் பேராசிரியை நிர்மலாதேவிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால், முதல் கட்ட விசாரணை மட்டும் முடிக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி இந்த வழக்கை எடுத்துக் கொண்டவுடன் இவ்வழக்கு விசாரணை மேலும் விரிவடையும். பேராசிரியை நிர்மலாதேவியிடம் முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.