இலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்!

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு தகுதியற்ற இதய சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவர் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக குறித்த தகுதியற்ற வைத்தியர் ஒருவர் வந்துள்ளார்.

இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் தகுதியை முழுமையாக பூர்த்தி செய்யாத வெளிநாட்டு வைத்தியர் தொடர்பில், சுகாதார அமைச்சிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் குறித்த பிரித்தானிய வைத்தியரிடம் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சைக்காக வருகைத்தந்துள்ள வைத்தியர் ஆர்.கே.பர்மின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த வைத்தியருக்கு பிரித்தானிய வைத்தியசபையினால் வழங்கப்படும் அனுமதிபத்திரம் (license to practice) இல்லை என அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவருக்கு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த அனுமதி பத்திரம் கிடைக்கவில்லை எனவும், தற்போது அவருக்கு 67 வயதான நிலையில் ஓய்வு பெற்றவர் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.