யாழ் சென்ற மனித நேயம் மிக்க மனிதன் யார் தெரியுமா?

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் குழந்தைகளை சந்திப்பதற்காக வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் யாழ். சென்றுள்ளார்.

ஆனந்த சுதாகரனின் மனைவி யோகராணியின் 31ஆம் நாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், யோகராணியின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துள்ளதுடன், இரு குழந்தைகளுடன் உரையாடி ஆறுதல் கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்,

நாட்டிற்கு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை கொண்டு வந்த தமிழ் மக்களுக்கு நன்றிக்கடனாக ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வார்கள் என்று பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளார்.

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை புதுவருடத்திற்கு முன்பாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாகக் கூறிய ஜனாதிபதி, ஏன் இன்னும் மௌனம் கொண்டு விடுதலை செய்யாமல் உள்ளார்.

மனைவியின் மரணச்சடங்கிற்கு ஆனந்த சுதாகரன் சென்ற வேளை இரண்டு குழந்தைகள் கட்டி அனைத்து கதறியதையும், பெண் குழந்தை தகப்பனுடன் பஸ்ஸில் ஏறுவதையும் நாங்கள் பார்த்து மிகவும் வேதனையடைந்தோம்.

இதனை கருத்தில் கொண்டு அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடுதலைக்காக சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து கையெழுத்து திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கினோம்.

இந்த இரண்டு குழந்தைகளும் தங்களது பாட்டியுடன் ஜனாதிபதியை சந்தித்த போது சித்திரை புதுவருடத்திற்கு முன்பாக அவரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாகக் கூறிய ஜனாதிபதி தற்போது பச்சிளம் குழந்தைகளை ஏமாற்றியது மிகவும் வேதனையை தருகின்றது.

அத்துடன், இந்த விடயமானது ஒட்டுமொத்தமாக சிறுபான்மை சமூகத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி பிள்ளைகளின் நலனின் அக்கறை கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று அநேகமானோர் சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்ற இந்த சூழலில் தனது தந்தையின் விடுதலைக்காக காத்திருக்கும் குழந்தைகளை மனிதாபிமானத்துடன் அவர்களின் துயரத்தில் தானும் பங்கெடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு மனித நேயத்துடன் செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் எம் மத்தியிலும் இன்றும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.