மக்களுக்கு எச்சரிக்கை!

நீராடச் செல்வோருக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் 727 உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தன. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதிக்குள் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை பெரும்பாலானோர் கவனக் குறைவு காரணமாகவே உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆபத்து எச்சரிக்கை தொடர்பில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் உள்ள ஆலேசனைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like