படையினருக்கான கோரிக்கைகள் அதிகரிப்பு- இராணுவத் தளபதி
சர்வதேச சமாதான நடவடிக்கைகளுக்காக இந்தக் கோரிக்கைகள் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
உலகில் பாரிய மனிதாபிமான பணிகளை மேற்கொண்ட இராணுவம் என்ற ரீதியில் இலங்கை இராணுவத்திற்கு உள்ள அனுபவமே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.
தற்போது இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 40 அதிகாரிகளும் 374 வீரர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.