ஒரே நாளில் 6 தங்கம்!!

ஒரே நாளில் 6 தங்கம்!!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று குத்துச்சண்டை மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கம் கிடைத்தது.

45 முதல் 48 கிலோ வரையிலான எடைப் பிரிவுக்கான மகளிர் குத்துச் சண்டை இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இந்திய வீராங்கணை மேரி கோம், வட அயர்லாந்தைச் சேர்ந்த கிரிஸ்டினா ஓ ஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

ஆடவருக்கான 52 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி, வட அயர்லாந்தைச் சேர்ந்த பிரண்டன் இர்வினுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், இந்திய வீரர் கவுரவ் சோலங்கி 4க்கு1 என்ற கணக்கில் இர்வினை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

46 முதல் 49 கிலோ வரையிலான ஆடவர் குத்துச் சண்டை போட்டியில் அமித் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.

60 கிலோ எடைப் பிரிவில் மனிஷ் கவுஷிக் வெள்ளி வென்றார். இன்று இந்தியாவுக்கு கிடைத்த மூன்று தங்கப் பதக்கத்தையும் சேர்த்து மொத்தம் 20 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என 47 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஈட்டி எறிதல் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த 20 வயதேயான வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
காமன்வெல்த் வரலாற்றில் ஈட்டி எறிதலில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.