பாதிரியாரின் முகம் சுளிக்க வைக்கும் செயல்: நீதிமன்றின் தீர்ப்பு

இங்கிலாந்தைப் சேர்ந்த பாதிரியார், பள்ளி மாணவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனதன் ராபின்சன் (75) என்ற பாதிரியார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள சின்னம்மாள்புரத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு, ‘கிரேயல் டிரஸ்ட்’ என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கான விடுதி ஒன்றை உருவாக்கினார்.

இந்நிலையில் 2011-ம் ஆண்டில் பாதிரியார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக காப்பகத்தில் தங்கியிருந்த 16 வயது மாணவன் சார்பில் முறைப்பாடு கொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாதிரியார் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டதாக தெரியவந்தது.

இதேவேளை வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், நேற்று வழக்கை நீதிபதி விசாரித்தார்.
ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like