தாயுக்கு பிதிர்கடன் கழித்துவிட்டு தந்தையின் வரவுக்காய் காத்திருக்கும் குழந்தைகள்!


ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் தந்தையின் வரவுக்காக காத்திருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை கீரிமலையில் தாயுக்கு பிதிர்கடன் கழித்த கனிதரன் அப்பா விடுதலை செய்யப்படுவார் என்ற ஜனாதிபதி மற்றும் பலரின் வாக்குறுதிகளில் அதிக நம்பிக்கை வைத்தவனாக காணப்படுகின்றான்.

கடந்த 15-03-2018 அன்று ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி ஆஸ்துமா நோய்க் காரணமாக மரணமடைந்திருந்தார். இந்த நிலையில் இவரின் இரு பிள்ளைகளும் அநாதைகளாக்கப்பட்டிருந்தனர். வயோதிப அம்மம்மாவின் பராமரிப்பில் இருக்கும் இந்த இரு பிஞ்சுகளின் எதிர்காலம் இப்போது தந்தையின் விடுதலையிலேயே தங்கியுள்ளது.

எனவே ஆனந்தசுதாகரன் மட்டுமல்ல எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.


Get real time updates directly on you device, subscribe now.

You might also like