வாகனச் சாரதியிடம் வசமாக மாட்டிய போக்குவரத்துப் பொலிஸ் – வைரலாகப் பரவும் வீடியோ

போக்குவரத்துப் பொலிசார் தண்டம் அறவிடுவதற்காக வாகனச் சாரதி ஒருவரை மறித்து அவரிடம் மாறி மாறி கருத்துக்கள் தெரிவித்த மற்றும் குறித்த சாரதி தான் வாகனத்தை தவறாகச் செலுத்தவில்லை எனக் கூறும் வீடியோக்கள் வைரலாகப் பரவிவருகின்றது.

கனகராயன்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் (12.04.2018) இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கனகராயன்குளம் பகுதியில் வீதியால் சென்ற ஒருவரது வாகனத்தை நேற்றுமுன்தினம் (12) இலங்கை போக்குவரத்துப் பொலிசார் மறித்துள்ளனர். தான் ஏன் மறிக்கப்பட்டடேன் என கேட்டபோது பிழையாக வாகனம் செலுத்தியதாகக் கூறியதோடு சிங்களத்தில் படிவத்தை நிரப்பியுள்ளனர்.

குறித்த வாகனச் சாரதி தனக்கு சிங்களம் தெரியாது எனவும் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதித் தருமாறு கேட்டபோது. இலங்கை சிங்கள நாடு. அரசாங்க மொழி சிங்களம். இலங்கை பொலிஸ் சிங்களப் பொலிஸ் எனவே சிங்களத்தில் தான் எழுதித் தருவோம் எனக் கூறியுள்ளனர்.


Get real time updates directly on you device, subscribe now.

You might also like