5 மாத கர்ப்பிணியை சூட்கேஸில் அடைத்து சாலையில் வீசிவிட்டு நாடகமாடிய கணவன்

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் சிவம் என்பவர் மாலா என்ற பெண்ணை, குடும்பத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் போது மாலாவின் தந்தை ரூ.5 லட்சம் வரதட்சணை தருவதாக கூறி தராமல் இருந்ததால், மாலாவுடன் சிவம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 7-ம் தேதி நொய்டாவில் உள்ள பிஸ்ரக் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி மாலா காணாமல் போய்விட்டதாக சிவம் புகார் அளித்தார்.

இதை விசாரித்த பொலிசார் தேசிய நெடுஞ்சாலை 24 பகுதியில் ஒரு பெரிய டிராவல் பேக்கில் இருந்து துர்நாற்றம் வருவதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அந்த பேக்கை திறந்து பார்த்தபோது,

அதில் பெண் சடலம் இருப்பதை கண்டு பொலிசார் அதிர்ந்து போனார்கள். எப்படியும் இந்தப் பெண் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்பதால், கடந்த 3 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகார்களை எல்லாம் பொலிசார் ஆய்வு செய்தனர்.

மாலாவின் கணவர் சிவத்தை பொலிசார் முறைப்படி விசாரணை நடத்தியதில் மாலாவை நான்தான் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.

வரதட்சணை கேட்டு மனைவி மாலாவுடன் சண்டையிட்ட சிவம், துண்டுமூலம் மாலாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க, ஒரு டிராவல் பேக்கிற்குள் மாலாவின் உடலை வைத்து சாலை ஓரத்தில் தூக்கி எரிந்துள்ளார்.

சிவன் மீது ஐபிசி 498ஏ, 304பி, 201, 316 ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சிவனின் பெற்றோர், சகோதரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like