வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிக் குற்றச்சட்டுக்களை முன்வைக்கிறது யாழ் நாளிதழ்!

வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது. குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

கூட்டு வங்கி கணக்குகள்.
வடமாகாண அமைச்­சர்­கள் தங்­க­ளது ஆள­ணி­யி­ன­ருக்கு உள்ள வெற்­றி­டங்­க­ளுக்கு நிய­மித்­த­வர்­க­ளு­டன், கூட்டு வங்­கிக் கணக்கு வைத்­தி­ருந்து, அவர்­க­ளது சம்­ப­ளப் பணத்­தை­யும் பெற்­றுக் கொண்­டுள்­ளமை கண்­டறி­யப்­பட்­டுள்­ளது.

பயன்படுத்தாத பிக்கப் வாகனத்திற்கு எரிபொருள்.
அதே­போன்று, ‘பிக்­கப்’ வாக னம் பயன்­ப­டுத்­தா­ம­லேயே, அதற்­கு­ரிய எரி­பொருள் கொடுப்­ப­ன­வாக 75ஆயி­ரம் ரூபா­வைப் பெற்­றுக் கொள்­வ­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

தனிப்பட்ட ஆளணி சம்பளத்தில் மோசடி.
முத­ல­மைச்­சர் தனது ஆள­ணி­யில் 15பேரை­யும், அமைச்­சர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தமது தனிப்­பட்ட ஆள­ணி­யில் 10பேரை­யும் நிய­மிக்க முடி­யும். வடக்­கில் முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட 5 அமைச்­சர்­க­ளும் இந்த எண்­ணிக்­கை­யில் தமது தனிப்­பட்ட ஆளணி நிரப்­பப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்டு, அந்த ஆள­ணி­யி­ன­ருக்­கு­ரிய சம்­ப­ளம் அர­சால் வழங்­கப்­ப­டு­கின்­றது. தனிப்­பட்ட ஆள­ணி­யில் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள் வழங்­கிய வங்­கிக் கணக்­குக்கு பணம் வைப்­பி­லப்­ப­டு­கின்­றது.

வடக்­கில் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளில் 3 அமைச்­சர்­க­ளின் அமைச்­சில் தமது தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிக்­கப்­பட்­ட­வர்­கள் பணி­யாற்­றா­மல், அமைச்­சி­லி­ருந்து அலு­வ­லர்­கள் பணி­யாற்­று­வது தெரி­ய­வந்­துள்­ளது.
தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக, ‘பிக்­கப்’ வாக­னத்தை அமைச்­சர் பயன்­ப­டுத்­து­கின்­றாரா என கோரப்பட்ட போது ,
அதற்கு அமைச்­சர் ஒரு­வர் ‘பிக்­கப்’ வாக­னத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும், அது ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பெறப்­பட்­டது என­வும், மாதாந்­தம் எரி­பொ­ருள் கொடுப்­ப­ன­வாக 75 ஆயி­ரம் ரூபா வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் பதில் வழங்­கப்­பட்­டது.

ஆனால் எந்­த­வொரு அமைச்­ச­ரும் இது­வ­ரை­யில் ‘பிக்­கப்’ வாக­னம் பயன்­ப­டுத்­த­வில்லை. மேலும், ஒரு அமைச்­ச­ரின், தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்டு சம்­ப­ளம் பெறு­ப­வர் ஒரு­வரை, அந்த அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­று­கின்­றாரா என்று அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, அப்­படி ஒரு­வர் பணி­யாற்­ற­வில்லை என்று பதில் வழங்­கப்­பட்­டது.

மகளுக்கு வேலை.
மற்­றொரு அமைச்­சர், தனது மக­ளின் பெய­ரை­யும் தனிப்­பட்ட ஆள­ணி­யில் குறிப்­பிட்டு வழங்­கி­யுள்­ளார். அவ­ரது மகள், அமைச்­சின் அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றி­யதே கிடை­யாது என்று அமைச்­சர் அலு­வ­ல­கத்­தில் பணி­பு­ரி­யும் அலு­வ­லர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.
இந்த அமைச்­சர், தனது கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தையே, அமைச்­ச­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வதி­வி­ட­மா­கக் குறிப்­பிட்டு அதன் வாட­கைப் பணத்­தை­யும் பெற்­றுக் கொள்­கின்­றார்.

சம்பளம் வழங்குவதில் மோசடி.
மூன்­றா­வது அமைச்­சர் தனது தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­க­ளு­டன் கூட்டு வங்­கிக் கணக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார். அந்த வங்­கிக் கணக்கு இலக்­கத்­துக்கே சம்­ப­ளம் வைப்­பி­லப்­ப­டு­கின்­றது. அதனை மேற்­படி அமைச்­சர் எடுத்­துக் கொண்டு, அதில் ஒரு தொகையை மாத்­தி­ரமே தனிப்­பட்ட ஆள­ணி­யில் உள்­ள­வர்­க­ளுக்கு வழங்கி வந்­துள்­ளார். இந்த விட­யம் அமைச்­சின் அலு­வ­லர்­க­ளால் கண்­ட­றி­யப்­பட்டு முத­ல­மைச்­ச­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முதலமைச்சர் நடவடிக்கை இல்லை.
முத­ல­மைச்­சர், அமைச்­ச­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. கூட்டு வங்­கிக் கணக்கை தனிப்­பட்ட வங்­கிக் கணக்­காக மாற்றி, அமைச்­சர் எடுத்­துக் கொண்ட பணத்தை மீள வழங்­கு­மாறே பணித்­துள்­ளார்.

இந்த விட­யம் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரைக் கேட்­ட­போது, அவர் அப்­படி எது­வும் நடக்­க­வில்லை என்று மறுத்­துள்­ளார். இருப்­பி­னும் முத­ல­மைச்­சர் தான் மேற்­படி உத்­த­ர­வைப் பிறப்­பித்­ததை ஏற்­றுக் கொண்­டுள்­ளார். அமைச்­சர்­க­ளின் ஏனைய மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தவ­றா­னது என்­றும் முத­ல­மைச்­சர் பதில் வழங்­கி­னார்.என குறித்த் பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது.