திரேசா மகளிர் வித்தியாலய மாணவர்களின் உணவு உற்பத்தியின் அறுவடை நிகழ்வு!

பேண்தகு பாடசாலை அபிவிருத்தி தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கற்றல் முறைமைக்கு பொருந்தும் வகையில் பாடசாலைத் தோட்டம் மற்றும் சூழலை கட்டி எழுப்பல் தொடர்பில் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதற்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் இந்த பேண்தகு பாடசாலை அபிவிருத்தி தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் உணவுற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தினுடாக பாடசாலைகளில் காணப்படும் குறைந்த பயன்பாட்டினை கொண்ட நிலத்தினை விவசாய ரீதியில் சுற்றாடல் நேயமிக்கதாக அபிவிருத்தி செய்யும் விவசாய உற்பத்தி அலகுகளை பாடசாலையினுடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன .

இதன்கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் வித்தியாலய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தினுடாக உற்பத்தி செய்யப்பட உற்பத்தி பயிர்களின் அறுவடை நிகழ்வு நேற்று(06) பாடசாலை அதிபர் திருமதி .மாலதி பேரின்பராஜா .தலைமையில் நடைபெற்றது .

இந்த அறுவடை நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like