யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(08) மின்சாரம் தடைப்படடிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை- 08 மணி முதல் மாலை-06 மணி வரை குடாநாட்டின் சங்கானை, சண்டிலிப்பாய், தொட்டிலடி, பிரான்பற்று, பண்டத்தரிப்பு, பிறவுண் வீதி, அரசடி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரை, கே.கே.எஸ் வீதியில் நாச்சிமார் கோவிலிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடிச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிச் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச் சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஓட்டுமடம் சந்தியிலிருந்து கே.கே.எஸ் வீதி வரை, அசாத் வீதி, வி.ஏ தம்பி லேன், பிரப்பங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி , கன்னாதிட்டி, மணிக்கூட்டு வீதி, சிவன் பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி ஆகிய பகுதிகளிலும்,

யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் கொடிகாமம் கச்சாய் வீதிப் பிரதேசம், அரசடி, சங்காத்தனை, மீசாலை, வங்களா வீதி, அல்லாரை, வெள்ளாம் பொக்கட்டி, கெற்பலி, கச்சாய், கச்சாய்த் துறைமுகம், பாலாவி, அம்மன் கோவிலடி, புத்தூர்ச் சந்தி, இராமாவில், நாவலடி, வரணி, கரம்பைக் குறிச்சி, வாழைத் தோட்டம், வேம்பிராய், மந்துவில், தாவழை, இயற்றாலை, கலைவாணி, மிருசுவில் வடக்கு, சுட்டிபுரம், ஹரிகரன் அச்சகம் பிறேவேற் லிமிற்றெட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ர பிறைசஸ் லிமிற்றெட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி.எல். சி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.