யாழ் நகரில் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் மட்டத்தேள்!

யாழ்ப்பாணம் தீவக பகுதிக்கு கடமைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் பெரிய விஷமட்டத்தேள் ஒன்று சாம்பாரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இன்று(4) காலை அரச உத்தியோகத்தர் தனது காலை உணவிற்காக யாழ் சத்திரச்சந்தியில் இயங்கும் ஹோட்டலில் இடியப்ப பார்சல் ஒன்றை வாங்கிக்கொண்டு தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் தான் வாங்கிய உணவு பார்சலை உண்ணுவதற்காக திறந்த போது சாம்பாரில் தேள் ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொதுச்சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

மேலும் இதற்கு முன்னரும் சுகாதார பரிசோதகரால் குறித்த ஹோட்டல் உணவு சீர்கேட்டினால் சீல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like