யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பாரமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(01) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை காலை-08 மணி முதல் பிற்பகல் – 06 மணி வரை இணுவிலின் ஒருபகுதி, மல்வம், உடுவில், சங்குவேலி, பிம்பிலி, கட்டுடை, மானிப்பாய், ஆனைக்கோட்டையின் ஒரு பகுதி, மானிப்பாய் Cargills Food City, Ceynor பவுண்டேசன் லிமிட்டட், மாவட்டக் கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், SOS சிறுவர் பூங்கா, அரியாலை டீசல் அன்ட் மோட்டார் என்ஜினியரிங், பி.எல்.சி நாயன்மார்கட்டு, Carlton Sports Net Work(CSN), பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டுச் சந்தையிலிருந்து நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, செம்மணி வீதி, கச்சேரி நல்லூர் வீதி, கனகரட்ணம் வீதி, திருமகள் வீதி, மலர்மகள் வீதி, கலைமகள் வீதி, பூமகள் வீதி, சாஸ்திரியார் வீதி, நடுத்தெரு லேன், நாவலர் வீதி, நொத்தாரிஸ் லேன், வேலப்பர் வீதி, புவனேஸ்வரி அம்பாள் வீதி, புரூடி லேன், ஸ்ரான்லி கல்லூரி வீதி, சுப்பிரமணியம் வீதி, முதலியார் வீதி, பாரதி லேன், புங்கன்குளம் வீதியில் புகையிரதக் கடவை வரை, நாயன்மார் வீதி, குகன் வீதி , பொன்னம்பலம் வீதி, நாவலர் வீதியில் மாம்பழச் சந்தியிருந்து நல்லூர் குறுக்கு வீதி வரை, ஏ-9 வீதியில் பாரதி வீதியிலிருந்து செம்மணி வளைவு வரை, நெடுங்குளம் வீதி புகையிரதக் கடவை வரை, முள்ளி, நாவலடி, பூம்புகார், அரியாலை கிழக்கு, பளையின் ஒரு பகுதி, அரசர் கேணி, கச்சாய்வெளி, தர்மக்கேணி, முகமாலை, இத்தாவில், எழுதுமட்டுவாள், உசன், விடத்தற்பளை, கெற்பலி, மிருசுவில் தெற்கு, தவசிக்குளம், நாவலடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like