க.பொ.த சாதாரண தரத்தில் கோட்டை விட்ட தலைநகர்!

2017ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஆறு பேர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் இரண்டு மாணவியரும், கம்பஹா ரத்னாவளி மகளிர் கல்லூரியின் இரு மாணவியரும், ரத்னபுர மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரு மாணவ மாணவிகளே முதலிடத்தை பெற்றுள்ளனர்.

தலைநகர் கொழும்பு மாவட்டத்தில் எவரும் முதலிடத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

2017ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவியர்களில் 9 ஆயிரத்து 960 பேர் அனைத்து பாடங்களுக்கும் சிறப்பு சித்தி (ஏ) பெற்றுள்ளதுடன், பரீட்சைக்கு தோற்றியவர்களுள் 67.24 வீதமானோர் இம்முறை கணித பாடத்தில் சித்தி எய்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.