தமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் யாழ்.மாணவி முதலிடம்! (Video)


எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வடக்கிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது இலட்சியம் என க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ். மாணவி தெரிவித்துள்ளார்.

2017 கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அபடிப்டையில் தமிழ் மொழி மூலம் தோற்றியவர்களுள் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியை சேர்ந்த மிருனி சுரேஷ்குமார் என்ற மாணவியே வடக்கிற்கு இவ்வாறு பெருமை சேர்த்துள்ளார்.

தனது விடாமுயற்சியே இந்த சாதனைக்கு காரணம் எனத் தெரிவித்த அவர், ஒவ்வொருவரும் விடா முயற்சியுடன் அர்ப்பணிப்புடன் உழைத்தால் முன்னேறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின. அதன்படி, இம்முறை அகில இலங்கை ரீதியில் ஆறு மாணவ மாணவிகள் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.