நாய்க்கு கருத்தடை செய்ய வீண் செலவு எதற்கு , ஹோட்டலில் கொத்து கொண்டுவந்து கொடுக்கவும்.

நாய்களை கட்டுப்படுத்த செலவிடப்படும் பணம் தொடர்பில் பதில் அளிக்கப்பட்ட போது மத்திய மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களின் நக்கல் காரணமாக இன்று இடம்பெற்ற கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நகைப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன் போது கட்டாக்காளி நாய்களால் நோய் பரவுவது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த 200 மில்லன் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கு குறுக்கிட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் லாபிர் ஹாஜியார் மற்றும் ஹிதாயத் சத்தார் ஆகியோர் நாய் இணப் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஏன் வீணாக 200 மில்லியன் செலவு செய்கிறீர்கள்.

அம்பாறை முஸ்லிம் ஹோட்டலில் இருந்து கொத்து வாங்கி வந்து கொடுத்தால் நாய் பெருக்கத்தை மிக குறைந்த செலவில் கட்டுப்படுத்திவிடலாமே என நக்கலாக தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துகொண்டு முஸ்லிம்கள் கருத்தடை மாத்திரைகளை உணவில் கலந்து கொடுப்பதாக கூறும் பொய் பிரசாரம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

நாய்களை ஒரு மாவட்டத்தில் கருத்தடை செய்ய 200 மில்லியன் செலவாகும் போது மனிதர்களை கருத்தடை செய்ய எத்தனை மில்லியன் செலவாகும்??

இது தெரியாத படித்த முட்டாள்கள் நாட்டில் இருப்பது இந்த நாட்டிற்கு பெரும் சாபம் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் லாபிர் ஹாஜியார் மற்றும் ஹிதாயத் சத்தார் ஆகியோர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like