கொழும்பு பாடசாலை மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி பலி!

கொழும்­பி­லி­ருந்து நுவ­ரெ­லி­யா­வுக்கு சுற்­றுலா சென்ற மாணவர் ஒருவர் கொத்­மலை ஆற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக கொத்­மலை பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொழும்­பி­லுள்ள முஸ்லிம் பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் மாண­வரே உயி­ரி­ழந்­த­வ­ராவார். இந்தச் சம்­பவம் நேற்றுப் பகல் ஒரு மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த பாட­சா­லையில் கல்வி பயிலும் 42 மாண­வர்­களும் இரண்டு ஆசி­ரி­யர்­களும் நுவ­ரெ­லியா பிர­தே­சத்­துக்கு வந்­துள்­ளனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் கொழும்பு நோக்கிப் பய­ணத்தை ஆரம்­பித்து சென்ற வழியில் கொத்­மலை ஆற்றில் நீரா­டிய போதே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த மாணவர் நண்­பர்­க­ளுடன் நீராடிக் கொண்­டி­ருந்த போது திடீ­ரென சுழியில் சிக்­குண்­டுள்ளார். இதன் போது சக மாண­வர்கள் அவரைக் காப்­பாற்ற முயற்­சித்த போதும் அது பல­ன­ளிக்­க­வில்லை.

இத­னை­ய­டுத்து கொத்­மலை பொலி­ஸாரின் உத­வி­யுடன் பிர­தேச வாசி­க­ளினால் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக கொத்­மலை பொலிஸார் தெரி­வித்­தனர் மீட்­கப்­பட்ட சடலம் கொத்­மலை வைத்­தி­ய­சா­லையின் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன், மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கப் போவ­தாக கொத்­மலை பொலிஸார் தெரி­வித்­தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like