யாழில் இராணுவ வாகனம் மோதி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு! (Video)


யாழ்ப்பாணம் – சாவ­கச்­சே­ரி­யில் நேற்­றி­ரவு இடம்­பெற்ற விபத்­தில் இளம் குடும்­பத் தலை­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். விபத்­துக்­குள்­ளாகி வீழ்ந்த அவரை ராணுவ பேருந்து மோதி­ய­தால் உயி­ரி­ழந்­தார் என்று சம்­பவ இடத்­தில் நின்­றி­ருந்­த­ வர்­க­ளால் கூறப்­பட்­டது.

எனி­னும் பொலி­ஸார் விசா­ர­ணை­யின் பின்­னரே அது பற்­றிக் கூற­மு­டி­யும் என்று கூறு­கின்­ற­னர்.

சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து சிறிது தூரத்­தில் புளி­ய­டி­யில் நேற்­றி­ரவு சுமார் 8 மணி­ய­ள­வில் விபத்து இடம்­பெற்­றது. அல்­லாரை வடக்­கைச் சேர்ந்த சந்­தி­ர­யோ­க­லிங்­கம் மயூ­ரன் (வயது – 28) என்­ப­வர் உயி­ரி­ழந்­தார். அவ­ர் 4 மாதங்­க­ளான குழந்­தை­யின் தந்தை.

“வீதி­யில் காரின் பின்­னால் அவர் பய­ணித்­துக் கொண்­டி­ருந்­தார். போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸார் காரை நிறுத்­தி­யுள்­ள­னர். அதன்­போது மோட்­டார் சைக்­கி­ளில் சென்­று­கொண்­டி­ருந்த மயூ­ரன் காரு­டன் மோதுண்டு வீதி­யில் வீழ்ந்­தார் என்­றும் அதன்­போது அவ­ருக்­குப் பின்­னால் பய­ணித்­துக் கொண்­டி­ருந்த ராணுவ பேருந்து மோதி­ய­தால் அவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் என்று ஆரம்ப விசா­ர­ணை­க­ளில் கூறப்­பட்­டது.

அவ­ரது சட­லம் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.
ராணுவ வாகன சாரதி கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று அங்­கி­ருந்­த­வர்­கள் கூறி­னர். ஆனால் அது தொடர்­பில் பொலி­ஸா­ரின் பதி­லைப் பெற­மு­டி­ய­வில்லை.
Get real time updates directly on you device, subscribe now.

You might also like