கொள்ளையர்களின் தாக்குதலில் சாவகச்சேரி பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி காமாட்சி அம்மன் கோவிலுக்கு மட்டக்களப்பை சேர்ந்த தனது நண்பியுடன் காரில் சென்று திரும்பியவேளை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரை மறித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தருணம் ஏற்பட்ட கைகலப்பில் தாக்குதலுக்கு உள்ளான யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் பரிசோதகர் ஹேரத் உயிரிழந்தார்.

நேற்று இரவு தலையில் தலைக்கவசத்தால் (ஹெல்மட்) தாக்கப்பட்டு படுகாயமடைந்த ஹேரத், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

குருநாகல் அலவ்வை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.சி. ஹேரத் (வயது 55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் துரிதமாக செயற்பட்ட ஏறாவூர் பொலிஸார் மைலம்பாவெளி பகுதியை சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like