விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் உகண்டாவில் இடம்பெற்றுள்ளது.

Entebee விமான நிலையத்தில் இருந்து EK729 என்ற விமானம் துபாய் செல்வதற்கு தயாராக இருந்தது.

அப்போது விமான பணிப்பெண் ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்து சரிபார்த்துள்ளதாக தெரியவருகிறது.

அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக குறித்த விமானப் பணிப்பெண் கீழே விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தகுந்த உதவிகள் வழங்கப்படுமென விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like