சங்கானை குருக்கள் படுகொலை – மூவருக்கு தூக்குத் தண்டனை (வீடியோ)

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து அவரதுபிள்ளைகளைக் காயப்படுத்தி விட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும்மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்திற்காக இராணுவச்சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இன்று(22) தீர்ப்பளித்துள்ளது.

தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியமைக்கு எதிரிகள் மூவருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்படுகின்றது.

குருக்கள் மற்றும் அவரது பிள்ளைகளை சுட்டுப் படுகாயப்படுத்தியமைக்கு மூன்று எதிரிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழியச்சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது என்றும், மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்இளஞ்செழியன் தண்டனை விதித்து தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ளவீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு நகைகள்மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றனர்.துப்பாக்கிச் சூட்டில்சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார். அவரது மகன்கள்இருவரும் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் இராணுவப் புலனாய்வாளர்களான, தமிழர்களான காசிநாதன் முகுந்தன், பாலசுப்பிரமணியம் சிவரூபன் ஆகியோரும் இராணுவச் சிப்பாயான பேதுறு குணசேனவும்எதிரிகளாகக் கைது செய்யப்பட்டனர்.மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றுவழக்கேடுகள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டன. சந்தேகநபர்கள் பிணையில்விடுவிக்கப்பட்டனர்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் தொகுப்புரை வழக்கைநெறிப்படுத்தினார்.

முதலிரண்டு எதிரிகள் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும்மூன்றாவது எதிரியான இராணுவச் சிப்பாய் சார்பில் மன்றினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி ஜோய் மகிழ் மகாதேவாவும், முன்னிலையாகி தமது தொகுப்புரைகளை முன்வைத்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.