உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்
தப்பியோடியவர்கள் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம்,வவுனியா மற்றும் ஊர்காவற்துறையைச்சேர்ந்தவர்கள்யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட  நால்வர் பொலிஸாரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி இமையானன் பகுதியில் வீடொன்றில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பொதுமக்களால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டபோது   ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்போது மற்றய மூவர் தப்பியோடியுள்ளனர்.

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறைப்பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஏனைய மூவரும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட வரிடம் பொலிஸார் மேற்கொண்;ட விசாரனைகளின் அடிப்படையிலும்,தப்பியோடியவர்கள் பயன்படுத்திய வாகன இலக்கத்தின் அடிப்படையிலும் சாவகச்சேரி நுணாவில்’ பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் தப்பியோடியவர்கள் மூவரையும் பொலிஸார் இன்று கைதுசெய்தனர்.

சாவகச்சேரி நூணாவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டு நடவடிக்கைக்க பயன்படுத்திய வடி ரக வாகம் ஒன்றும், 12 ஸ்மார்ட் தொலைபேசிகளும், 4சோடி கால் சலங்கைகள், வீட்டில் பணம் சேமிக்கும் உண்டியல்கள் நான்கு, ஒருதொகை கட்டார்’ நாட்டு பணம்,மற்றும் 2 கமராக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் வல்லெட்டித்துறைப்பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை வல்லெட்டித்துறைப்பொலிஸார் எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் புத்தளத்தினை சேர்ந்தவர் எனவும்,மற்றயவர்கள் வவுனியா மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்ப்பட்டுள்ளனர்.