யாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவிகியுள்ளது 

யாழ்ப்பாணம் அரியாலையைச்சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்

யாழ் மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் இவர் நேற்று பிற்பகல் யாரும் இல்லாத வேளை தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளார்

தற்கொலை செய்வதற்கு முன்னர் யுவதி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ் பிராந்திய பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்புத்துள்ளனர்

குறித்த யுவதி கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில் யாழ் மாவட்ட விழப்புலன்ற்றவர் சங்கத்தில் கடமையாற்றிவந்த இந்த யுவதி எழுதியுள்ள கடித்த்தில் அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவர்தான் தனது சாவிக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது

பல்லேறு ஊழல் தொடர்பான விடயங்களில் குறித்த சட்டத்தரணி தன்னை கட்டாயப்படுத்தி வந்ததுடன் பெரும் தொகையான பணத்தை தாம் திருடிவிட்டதாக தற்போது தெரிவித்து தம்மை அச்சுறுத்துவதாகம் எனவே தான் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததாகவும் யுவதி எழுதிய கடித்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

சடலம் பிரேத பரிசோதனைக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் குறித்த சட்டத்தரணியிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது