2020 வரை ரணிலே பிரதமர்!

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தாலும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக பதவி வகிப்பார் என அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சிக்கு தேவையான வகையில் அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்யாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அம்பேவல பால் தொழிற்சாலைக்கு இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதிக்கு பிரதமருக்கும் முறை ஒன்று உள்ளது. அந்த முறைமைக்கு முரணாக எவராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது.

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலர் கையெழுத்திட்டிருந்தாலும், ஐக்கிய தேசியக்கட்சியினர் எவரும் அதில் கையெழுத்திடவில்லை எனவும் அமைச்சர் ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like