இன்றைய ராசிபலன் 22-03-2018

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணம் தவிர்க்கவும்.

ரிஷபம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பண வரவில் தடை ஏற்படுவதால், மனதில் நிம்மதி இருக்காது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்

மிதுனம்: தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கடகம்: உறவினர்கள் வருகையால் வீட்டில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. பணியாளர்களிடம் எச்சரிக்கை தேவை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: இன்று சுமாரான நாளாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வெளியிடங்களில் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பது அவசியம். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராக இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

துலாம்: வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவியின் அன்பும், அரவணைப்பும் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் அனுகூலம் உண்டு. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விருச்சிகம்: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். எதிரிகளால் மறைமுக பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். தேவையற்ற அலைச்சல்களால் உடல்நலனும், அதனால் மனநிம்மதியும் பாதிக்கப்படும். பயணங்களில் தடை ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது. வியாபாரம் மந்தமாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு: எதிர்பார்த்த பணவரவு இருக்காது. தந்தை வழி உறவினர்களால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். சிறிதளவில் ஆரோக்கியக் குறைப்பாடு ஏற்படும் என்பதால் உடல்நலனில் அக்கறைக் காட்டுவது அவசியம். விரோதிகளால் சிறிய அளவில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் கவனம் அவசியம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வழியில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

மகரம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் திறமையால் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் இருமடங்காக இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும். சிலருக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்: இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தினரிடம் அனுசரித்து நடந்துக் கொள்வது அவசியம். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like