கெனியன் ஆற்றில் மூழ்கி பலியான மாணவனின் சடலம் மீட்பு!

கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் ஆற்றுப்பகுதியில் தவறி வீழ்ந்த சிறுவனின் சடலம் சுழியோடிகளின்உதவியுடன் இன்றையதினம்(21.03.2018) காலை 10.30, மணியளவில் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 7 கல்வி பயிலுல் 13 வயதுடைய விஜயகுமார் கலைரமன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.அப்புகஸ்தனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் தந்தையும் மகனும் அதிபாதுகாப்பு வலய பகுதியில் நேற்றையதினம்(20.03.2018) மாலை 4 மணியளவில் வீட்டிற்கு விறகு தேடுவதற்காக சென்றுள்ளார்.குறித்த தந்தையுடன்சென்ற அவருடைய மகன் நீர் அருவி பகுதியில் கற்பாறை ஒன்றில் ஏறும் பொழுது காலிடறி தவறி நீர்தேக்கத்தில் வீழ்ந்துள்ளாா்.
உடனே இவரை காப்பாற்றுவதற்காக தந்தை நீர்தேக்கத்தில் குதித்தபோதிலும், இருவரும் உயிருக்கு போராடிய நிலையில், தந்தையின் கூச்சலை கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றியுள்ளனர்.
எனினும், நீர்தேக்கத்தில் வீழ்ந்த மகனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் நீரில் மூழ்கிய சிறுவனை மீட்க கடற்படை சுழியோடியின் உதவியை நாடிய நிலையில் சடலம் 21.03.2018 காலை மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட சடலத்தை மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னா் மரண பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like