இலங்கையின் 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று அனுஷடிக்கப்படுகிறது. (படங்கள் , வீடியோ)

இலங்கையின் 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், இலங்கையின் 152வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஸான் பெர்னான்டோ, யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணவர்த்தன, மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஸான் பெர்னான்டோ சிறப்புரையாற்றினார்.

Get real time updates directly on you device, subscribe now.