தெல்தெனியவில் இரு கடைகளுக்கு தீ வைத்த 16 பேருக்கும் ஏப்ரல் 2 வரை விளக்கமறியல்

கண்டி திகன மொர­க­ஹ­முல்ல பகு­தியில் வர்த்­தக நிலை­யங்கள் இரண்­டுக்கு தீ வைத்­தமை தொடர்பில் தெல்­தெ­னிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 24 பேரில் 8 பேர் நேற்று விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

குறித்த 8 பேரும் அந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­ட­வில்லை என்­பது பொலி­ஸாரின் மேல­திக விசா­ர­ணைகள் ஊடாக தெளி­வா­ன­தை­ய­டுத்து அது தொடர்பில் நீதி­மன்­றுக்கு பொலிஸார் தெளி­வு­ப­டுத்­தி­ய­தா­கவும் அத­னை­ய­டுத்தே அந்த 8 பேரும் விடு­விக்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந்த இரு கடைகள் மீதான தாக்­குதல் தொடர்பில் தெல்­தெ­னிய பொலி­ஸாரால் 24 பேர் கைது செய்­யப்­பட்ட நிலையில் அவர்கள் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. தெல்­தெ­னிய மாவட்ட நீதிவான் எம்.எச். பக்­கீர்தீன் முன்­னி­லையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்ற போது மேல­திக விசா­ரணை அறிக்கை தெல்­தெ­னிய பொலி­ஸாரால் முன்­வைக்­கப்­பட்­டது. இதன்­போது குறித்த கடைகள் எரிப்பு விவ­கா­ரத்தில் கைதா­கி­யுள்ள 8 பேருக்கு தொடர்பு இல்லை என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே அந்த 8 பேரையும் விடு­வித்­துள்ள நீதிவான் எம்.எச். பக்­கீர்தீன் ஏனைய 16 பேரையும் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

முன்­ன­தாக, கடந்த பெப்­ர­வரி மாதம் 22 ஆம் திகதி லொறி மோதி முச்­சக்­கர வண்­டியின் பக்கக் கண்­ணா­டியில் சிறு சேதம் ஏற்­பட்ட விவ­கா­ரத்தில் தாக்­குதல் சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றி­ருந்­தது.

எனினும் குறித்த லொறி சாரதி அம்­பல பகு­தியில் உள்ள தனது வீடு நோக்கி லொறியில் சென்று கொண்­டி­ருக்­கையில் அவரைப் பின்­தொ­டர்ந்து இளை­ஞர்கள் குழு­வொன்று கண்டி – திகன பகு­தியில் உள்ள எரி­பொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகில் வைத்து அவரை மடக்கிப் பிடித்து கீழே இறக்கி அவரை தாக்­கி­யுள்­ள­னது.

தலைக்­க­வ­சங்கள், எரி­பொருள் நிரப்பு நிலையம் அருகில் இருந்த கதி­ரைகள் உள்­ளிட்­ட­வற்றால் இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதனால் குறித்த சாரதி படு­கா­ய­ம­டைந்­துள்ளார். இத­னை­ய­டுத்து அவர் கண்டி போதன வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் சம்­பவம் தொடர்பில் தெல்­தெ­னிய பொலிஸார் சார­தியைத் தாக்­கி­ய­தாகக் கூறப்­படும் 4 இளை­ஞர்­களை கைது செய்து தெல்­தெ­னிய நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்து விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ளனர்.

இத­னி­டையே கண்டி போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.குமாரசிங்க எனினும் 41 வயதான சாரதி கடந்த மார்ச் 3 ஆம் திகதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தகக்து. இதனையடுத்து கண்டியில் கலவரம் இடம்பெற்றிருந்தது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like