பாடசாலையில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு :யாழில் சம்பவம்!

Get real time updates directly on you device, subscribe now.

யாழ்ப்பாணம் – சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவன் பாடசாலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.

சுழிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் ஹரிகரன் என்ற ஒன்பது வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த மாணவன் நேற்றுமுன்தினம்(16-03-2018) பாடசாலைக்கு சென்ற போது புத்தக பை தடக்கி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளான்.

அதனை அடுத்து பாடசாலை ஆசிரியர்கள் மாணவனை சிகிச்சைக்காக சங்கானை வைத்திய சாலைக்கு எடுத்து சென்றனர்.

மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டான் என சங்கானை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாணவனின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Get real time updates directly on you device, subscribe now.