உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அழகி (படங்கள்)

அமெரிக்காவைச் சேர்ந்த மெலானி கெய்டஸ் என்ற பெண் தன் உடலில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அவை எல்லாம் புறம் தள்ளி, இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மெலானி கெய்டஸ் (28) எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு பிறந்தவர்.

எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா என்றால் முடி வளராது, நகம் வளராது, பற்கள் உடைந்து போகும். தோல் துவாரங்கள் இருக்காது. இதனால் வியர்வை வெளியேறாது, அவர் தண்ணீரிலே இருக்க வேண்டும்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வது என்பதே மிக அரிது. அதனையெல்லாம் தாண்டி சாதித்துள்ளார் மெலானி கெய்டஸ்.

இவர் நியூயார்க்கில் உள்ள கல்லூரி ஒன்றில் கலை தொடர்பான படிப்பை கற்றுக் கொண்டிருந்தபோது, புகைப்படம் ஒன்றிற்கு மொடலாக காட்சியளிக்கும் வாய்ப்பு மெலானிக்கு கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து அப்புகைப்படத்தை மெலானி கெய்டஸ் தனக்கு தெரிந்த புகைப்பட கலைஞர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். பின்பு விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்து, அதன்மூலம் மொடல் உலகிற்குள் காலடி வைத்துள்ளார் மெலானி.

மொடலிங் துறையில் தனக்கென்று தனி இடம் ஒன்றை பிடித்துவிட்ட மெலானி, சர்வதேச பேஷன் இதழ்களின் அட்டைப்படங்களிலும் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தனக்கு இந்த நோயால் ஒரு பிரச்சனை இல்லை. நான் இந்த நோயோடு நோயாக சேர்ந்து வாழ கற்றுக் கொண்டேன். ஆனால் தன்னை பார்ப்பவர்கள் தான் இந்த நோயை பிரச்சனையாக பார்க்கிறார்கள்.

தனக்கு பற்கள் இல்லை. இருந்த போதும் செயற்கையாக பற்களை பொருத்தினேன். ஆனால் தன்னால் பற்கள் இல்லாமலும் உணவு உண்ண முடியும் என்பதை அறிந்தேன்.
இந்த செயற்கை பற்கள் தன்னை சுற்றி இருப்பவர்களை மட்டுமே சௌகரியமாக உணர வைக்கிறது என்பதை அறிந்து கொண்டதன் பின்னர் கழற்றி விட்டேன் என்றார்.