போத்தல் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்-

உலகம் முழுவதும் உள்ள பிரபல குடிதண்ணீர் நிறுவனங்களின் போத்தல் குடிநீரை ஆய்வுக்குட்படுத்தியதில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை அமைப்பான ’Orb Media’ இந்த ஆய்வை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் மக்களிடம் பிரபலமடைந்துள்ள 250 குடிதண்ணீர் போத்தல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அமெரிக்காவின் பெர்டோனியாவில் உள்ள State University of New York பல்கலைகழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் பிரபல குடிதண்ணீர் போத்தல் நிறுவனங்களின் தண்ணீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறிப்பட்டது.

சுமார் ஒரு லீட்டர் தண்ணீரில் 10பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் ஊடகத்திடம் குறிப்பிடுகையில்: நாங்கள் போத்தல் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டறிந்தோம். குறிப்பிட்ட நிறுவனத்தை சுட்டிக் காட்டுவதற்காக இதனை நாங்கள் குறிப்பிடப்படவில்லை. இது அனைத்து இடத்திலும் உள்ளது. நமது சமூகத்தில் பிளாஸ்டிக் ஒரு பரவலான பொருளாக மாறியுள்ளது என்று கூறியுள்ளனர்.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில் குழாய் தண்ணீரில் மாசு உள்ளது என்று போத்தல் தண்ணீரை மக்கள் குடிநீர் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவற்றிலும் இம்மாதிரியான சுகாதாரக் குறைபாடுகள் உள்ளதை வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். அக்குவாபினா, தசானி, லிபியன், நெஸ்லே பியோ லைஃவ், சாம், ப்ளை கினோ, அக்குவா, லிஸ்லரி போன்ற வர்த்தக பெயருடைய குடிநீர் போத்தல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like