நான்கு அமைச்சுகளின் ஊடாக இழப்பீடுகளை வழங்க பிரதமர் பணிப்புரை

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவன்முறைகள் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு நான்கு அமைச்சுகளின் ஊடாக இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கான பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

பௌத்த சாசன, தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம், அனர்த்த நிவாரணம் மற்றும் புனருத்தாரணம், மீள்குடியேற்ற அமைச்சு என்பனவே குறித்த அமைச்சுகளாகும்.

கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட வணக்கத்தலங்கள் பௌத்த சாசன மற்றும் தபால், முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சினால் திருத்திக் கொடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட சொத்துக்களுக்கான இழப்பீடுகள் புனருத்தாரண, மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படவுள்ளது.

அனர்த்தம் தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் பொதுவான இழப்பீடுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

அதே ​நேரம் இனவன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் நான்கு மாத காலத்துக்குள் பழைய நிலைக்கு புனரமைத்துக் கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசி்ங்க கண்டிப்பான உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.