இன்றைய ராசிபலன் 15-03-2018

மேஷம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை நடக்கும்.

ரிஷபம்: புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் செலவுகள் ஏற்படும்.

மிதுனம்: இன்று பிற்பகலுக்கு மேல் நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உறவினர்களால் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தேவைப்படும் பணம் கடனாகவாவது கிடைத்துவிடும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்: இன்று புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அரவணைத்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். அலுவலகத்தில் வேலைகள் அடுக்கடுக்காக வந்தாலும் அழகாகச் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் உண்டாகும்.

சிம்மம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் அதிகரிப்பது உற்சாகம் தரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி: மனதில் இனம் தெரியாத உற்சாகம் காணப்படும். சிலருக்கு குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. கோயில் விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை அனைவராலும் பாராட்டப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

துலாம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவையான பணம் கிடைக்கும். சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அதனால் ஆதாயமும் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.

தனுசு: மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தைவழி உறவுகளால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்களின் உதவியுடன் முடிப்பீர்கள். வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்: மனதில் இனம் தெரியாத சோர்வு ஆட்கொள்ளும். தேவையான பணம் கிடைத்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கும்பம்: இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் . வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்க நேரிடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்: தேவையான பணம் இருந்தாலும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும். அரசாங்கக் காரியங்களில் இழுபறியான நிலையே காணப்படும். சிலருக்கு தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். கொடுத்த கடன் திரும்ப வரும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

Get real time updates directly on you device, subscribe now.