உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் 76 வயதில் மரணம்!!

உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76ஆவது வயதில் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர்.

ஏ ஃப்ரீஃப் ஹிஸ்டிரி ஆஃப் டைம்`( A Brief History of Time) என்ற புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்

“எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தன்னுடைய 22ஆம் வயதில், மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. மேலும், அந்த நோயால் அவர் சில நாட்களே உயிருடன் வாழ்வார் என்றும் கூறினர்.

அந்த நோயால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது; மேலும் அவர் பேச முடியாத நிலைக்கும் போனார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அவரது இல்லத்தில் அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் பிள்ளைகளாகிய லூசி, ராபட் மற்றும் டிம், “ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மேலும் அவரின் பணிகள் ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளனர்.

அவரின் மன தைரியம் மற்றும் உறுதியை புகழ்ந்த அவரின் பிள்ளைகள், அவரின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் உலகளவில் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like